37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

டிராவல் ஏஜென்ட்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்படும் ஏர் இந்தியா விமான டிக்கெட்டிற்கு அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்களா? – எங்கே புகார் அளிப்பது?

Air_India_generic_

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கில் இந்திய அரசு வந்தே பாரத் திட்டம் என்னும் சிறப்பு விமான சேவையை வழங்கிவருகிறது.

இந்நிலையில் இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா இன்று ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “டிராவல் ஏஜென்ட்களிடம் விமான டிக்கெட் முன்பதிவு செய்வோர் யாரும், எங்களது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விமான டிக்கெட் கட்டணத்தை விட அதிகமாக பணம் செலுத்த வேண்டாம்” என தெரிவித்திருக்கிறது.

நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணத்தை விட யாரேனும் (டிராவல் ஏஜென்ட்கள்) அதிகமான கட்டணத்தை வசூலித்தால் [email protected] இந்த இணைய முகவரியில் தங்களுக்கு எழுதுமாறு வலியுறுத்தியிருக்கிறது ஏர் இந்தியா.

இதையும் படிங்க.!