UAE Tamil Web

ஏர் இந்தியாவின் பெயரில் போலி வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஜாக்கிரதை மக்களே..!

Air_India_Reuters

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்துவதாக போலி நிறுவனம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துவருவதாகவும் மக்கள் யாரும் அதனை நம்ப வேண்டாம் எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” எங்களுடைய லோகோ, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தி மோசடி நபர்கள் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களைப் பரப்பி வருகின்றனர். எங்களது நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வுகள் குறித்து அங்கீகாரம் பெற்ற நாளிதழ்கள் மற்றும் எங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவலை வெளியிடுவோம். இந்த மூன்றாம் நிறுவனத்தின் மோசடி வேலைகளுக்கு ஏர் இந்தியா ஒருபோதும் பொறுப்பேற்காது. அதேபோல இதன் காரணமாக நிகழும் பண மோசடிகளுக்கு எங்களது நிறுவனம் ஒருபோதும் பொறுப்பேற்காது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், தங்களது விமான நிறுவனத்தின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுப்பட்டு மோசடி வேலைகள் நடைபெறுவதாகவும் மக்கள் அவற்றை நம்பவேண்டாம் எனவும் ஏர் இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Air_India_Reuters
3 Shares
Share via
Copy link