புனேயிலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு துபாய் போக்குவரத்துக்கு இந்திய விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட புனே – துபாய் இடையேயான விமான போக்குவரத்து சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 27 ஆம் தேதி முதல் மீண்டும் துவங்க இருப்பதாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா சற்று குறைந்த நிலையில் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் அறிவிக்கப்பட்டது. அப்போது ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி மக்களை பீதியில் ஆழ்த்தியதால், சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தவு திரும்பப் பெறபட்டது.
இதை அடுத்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை பிப்ரவரி 28 ஆம் தேதி நீட்டித்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து வரும் 27 ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவைக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.