ஏர் விஸ்டாரா நிறுவனம் இந்தியாவிற்கு செல்ல தினசரி நேரடி விமானங்களை அறிமுக கட்டணத்தில் அறிவித்துள்ளது.!

Air Vistara announces daily direct flights to Dubai

ஏர் விஸ்டாரா(Air vistara) நிறுவனம் துபாய்க்கு செல்ல தினசரி நேரடி விமானங்களை அறிவித்துள்ளது.

டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு நிறுவனமான இந்தியாவின் ஏர் விஸ்டாரா (Air vistara) மும்பையில் இருந்து துபாய்க்கு தினசரி நேரடி விமானங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.

மும்பை – துபாய்- மும்பைக்கான அறிமுக Economy கட்டணமாக ரூ .17,820 ஆகவும், துபாய் – மும்பை – துபாய் 765 திரகம் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான நிறுவனம் தனது ஏர்பஸ் A320neo என்ற மூன்று வகுப்பு கேபின் வசதியுடைய விமானத்தை துபாய்க்கு வந்து செல்ல பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பைக்கு அப்பால் உள்ள மற்ற நகரங்களான டெல்லி, பெங்களூரு, சென்னை, கோவா, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா மற்றும் சிங்கப்பூரிலிருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வசதியான ஒரு இலக்கை தேர்வு செய்து கொள்ளலாம்.

Loading...