UAE Tamil Web

ஷாஹீன் புயல் எதிரொலி : துபாய், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கான விமானப் போக்குவரத்தை ரத்து செய்தது ஓமான் அரசு..!

Stock-India-airport-Indigo

இந்தியா – பாகிஸ்தான் கடல்பரப்பில் உருவான ஷாஹீன் புயல் ஓமானில் கரையைக் கடக்க இருக்கிறது. இதனால் ஓமான் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிபப்டையில் எடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக, வெளிநாடுகளில் இருந்து ஓமானுக்கு இயக்கப்படும் மற்றும் ஓமானில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ஓமான் ஏர் விமானங்கள் அனைத்தும் வேறு தேதிகளில் இயக்கப்படும் (Rescheduled) என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து மஸ்கட்டிற்கு இன்று இயக்கப்பட இருந்த விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. போலவே, துபாய் விமானங்களையும் ரத்து செய்திருக்கிறது அரசு.

Stock-India-airport-Indigo
6 Shares
Share via
Copy link