UAE Tamil Web

அஜ்மான் – அபுதாபி பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!

கொரோனா பரவல் காரணமாக அஜ்மான் – அபுதாபி இடையிலான பேருந்து சேவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு அஜ்மான் – அபுதாபி இடையிலான பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டது. ஒரு டிக்கெட்டின் விலை 35 திர்ஹம்ஸ் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மசார் கார்ட் பயனாளர்களுக்கு 30 திர்ஹம்ஸ் பயண கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அஜ்மான் – அபுதாபி இடையே 2 முறை பேருந்து சேவை இயக்கப்படுகின்றன. முதல் பேருந்து காலை 7 மணிக்கு அஜ்மானில் உள்ள அல் முசல்லா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு அபுதாபி பேருந்து நிலையத்தை சென்றடையும். பின்னர் மறுமார்க்கத்தில் அதே பேருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அஜ்மான் வந்தடையும். இதேபோல மாலை 6 மணிக்கு மீண்டும் அஜ்மானில் இருந்து புறப்பட்டு அபுதாபி செல்லும் பேருந்து அங்கிருந்து இரவு 9 மணிக்கு மறுமார்க்கத்தில் புறப்படும் என அஜ்மான் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2 Shares
Share via
Copy link