UAE Tamil Web

“பசியோடு யாரும் இருக்கக்கூடாது” – வாகனவோட்டிகளுக்கு இப்தார் உணவுகளை வழங்கி ஆச்சர்யப்படுத்திய அமீரக காவல்துறை..!

ajman police

அஜ்மானில் வாகனவோட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு காவல்துறையினர் இப்தார் உணவுகள் மற்றும் பானங்களை வழங்கினர். இதனால் பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர்.

அஜ்மானில் இப்தார் நேரங்களுக்கு விரைவாக செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் வாகனத்தினை வேகமாக ஓட்டுவதால் விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனைத் தடுக்கும் விதமாகவும் பசித்திருக்கும் மக்களுக்கு உணவு வழங்கிடும் மனிதாபிமான அடிப்படையிலும் இந்த முயற்சியை அஜ்மான் காவல்துறை முன்னெடுத்துள்ளது.

அஜ்மான் காவல்துறையின் உட்புற பகுதிகளுக்கான ரோந்துத் துறை இயக்குனர் கேப்டன் ஹமீத் அப்துல் காதிர் அல் அத்தார் இதுகுறித்துப் பேசுகையில்,” ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பவர்களுக்கு இந்த உணவானது வழங்கப்பட்டது. காவல்துறையின் நடவடிக்கைகள் மூலமாக மக்களை திருப்தியுரச் செய்யும் நோக்கத்தில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அஜ்மான் ரோந்துத்துறை, இஸ்லாமிய வங்கியின் தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து எமிரேட் முழுவதும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு உணவுப் பொட்டலங்கள் மற்றும் பானங்களை வழங்கினர்.

ajman police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap