அமீரகத்தில் சிக்கிய வினோத திருடர்கள்.!

Stealing

அமீரக அஜ்மான் எமிரேட்டில் உள்ள ஒரு உணவு நிறுவன கிடங்கை உடைத்து 65,000 திர்ஹம் பணம் மற்றும் 26,500 திர்ஹம் மதிப்புள்ள பொருட்களை திருடிய ஐந்து ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள். இந்த திருட்டில் ஈடுபட்ட 5 நபருக்கும் 1 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கியுள்ளது அஜ்மான் குற்றவியல் நீதிமன்றம். மேலும், அவர்கள் சிறை தண்டனைக்கு பிறகு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு தகவல்

அமீரக அஜ்மான் எமிரேட்டில் உள்ள ஒரு உணவு நிறுவன உரிமையாளரிடமிருந்து காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், தங்களின் உணவு நிறுவனத்தில் கொள்ளை நடந்திருப்பதாக அவர் தகவல் கொடுத்துள்ளார். தகவலை கேட்டு உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, உணவு நிறுவன கிடங்கு முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்து இருப்பதை கண்டனர்.

கொள்ளை அடித்தவர்கள் சிக்கினர்

பின்னர், காவல்துறை கொள்ளைபோன இடத்தில் கைரேகை மற்றும் CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஐந்து ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

உடனே, காவல்துறையினர் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ததுடன் அவர்கள் கொள்ளையடித்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Source: Khaleej Times

Loading...