UAE Tamil Web

அஜ்மானில் மசூதிகளுக்கு செல்ல வழிப்பாட்டாளர்களுக்கு இலவச போக்குவரத்து சேவை தொடக்கம்

தராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் தொழுகைக்காக முஸ்லிம்களை மசூதிக்கு இலவசமாக பேருந்தில் அழைத்துச் செல்வதாக அஜ்மான் பொது போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையால், போக்குவரத்து நெரிசல் தடுக்கப்படும் என்றும் எமிரேட்டில் போக்குவரத்து அமைப்பை பலப்படுத்தும் என்றும் அஜ்மான் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சேவை செய்ய சமூகப் பொறுப்பை மேம்படுத்துவதற்கான முயற்சியாக இந்த நடவைக்கை மேற்கொள்ளப்படுகிறது.

புனித ரமலான் மாதத்தின் மீதமுள்ள நாட்களில் தராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் தொழுகைக்காக வழிபாட்டாளர்களை மசூதிக்கு அழைத்துச்செல்ல இந்த முயற்சியின் நோக்கமாக உள்ளது.

பொது போக்குவரத்து மற்றும் உரிமம் வழங்கும் முகமையின் நிர்வாக இயக்குனர் பொறியாளர் சாமி அலி அல் ஜல்லாஃப் கூறுகையில், “அஜ்மானில் மிகவும் நெரிசலான மசூதியான ஷேக் ஜயீத் மசூதி மற்றும் அம்னா பின்ட் அல் குரைர் மசூதிக்கு வழிபாட்டாளர்களை ஏற்றிச் செல்ல பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பேருந்துகள் எமிரேட்ஸ் ஹாஸ்பிடாலிட்டி ஹால் பார்க்கிங் பகுதியில் இருந்து இரண்டு மசூதிகளுக்கு ஒவ்வொரு பயணத்திற்கும் இடையே 10 நிமிட இடைவெளியில் தொடங்கும்.

தராவீஹ் தொழுகைக்கான முதல் பயணம் இரவு 7:30 மணிக்கு தொடங்கி இரவு 10:30 மணி வரை தொடரும். தஹஜ்ஜுத் தொழுகைக்காக, இரவு 11:30 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை போக்குவரத்து சேவை நடைபெறும்.

அதிக அளவிலான பாதுகாப்பு, சொகுசு மற்றும் தரமான இருக்கைகளுடன் கூடிய பேருந்துகளை இயக்கப்படுவதால் வழிபாட்டாளர்கள் விரும்பி பயணம் செய்கின்றனர்” என்றார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap