UAE Tamil Web

60 வயது முதியவரை தூக்கி வீசிய கார் : குற்றவாளியை விரட்டிப்பிடித்த காவல்துறை..!

Ajman_

அஜ்மானின் கார்னிச் தெருவில் உள்ள அல் நைகில் ஏரியா 2ல் இன்று காலை விபத்து ஒன்று நிகழ்ந்திருக்கிறது. 60 வயதான முதியவர் ஒருவர் சாலையை கடக்க முற்படுகையில் வேகமாக வந்த கார் ஒன்று அவரை தூக்கி வீசியிருக்கிறது.

இதனை அடுத்து அஜ்மான் போக்குவரத்துத்துறை துறையைச் சேர்ந்த ரோந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரை ஷேக் கலீஃபா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறை முதியவரை மோதிய வாகன ஓட்டியை ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்துள்ளனர். அவர் 18 வயதான இளைஞர் என காவல் துறை தெரிவித்திருக்கிறது.

இது குறித்துப் பேசிய அஜ்மான் போக்குவரத்து காவல் பிரிவின் தலைமை அதிகாரி மேஜர் இசா முகமது அல் ஷம்சி,” சாலை விபத்து ஏற்பட்டால் வாகன ஓட்டி அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தல் கூடாது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் சாலையை கடக்க வேண்டும்” என எச்சரித்தார்

Ajman_
0 Shares
Share via
Copy link