UAE Tamil Web

குறைவான ஊதியம் பெறும் குடும்பங்களுக்கு 2000 திர்ஹம்ஸ் வழங்கப்படும் – அஜ்மான் ஆட்சியாளர் அறிவிப்பு..!

ruler ajman

அஜ்மானின் ஆட்சியாளரும் உச்ச சபையின் உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி ஆட்சிக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இதனைக் கொண்டாடும் விதமாக அஜ்மானில் உள்ள குறைவான ஊதியம் பெறும் குடும்பங்களுக்கு உதவ 4 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை அவர் ஒதுக்கியுள்ளார்.

அஜ்மானின் பட்டத்து இளவரசரும் அஜ்மான் நிர்வாகக் கவுன்சிலின் தலைவரும் ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி தொண்டு நிறுவனத்தின் புரவலர்கள் சபையின் தலைவருமான ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுவைமி, அஜ்மான் ஆட்சியாளரின் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி தொண்டு நிறுவனத்தின் தலைமை இயக்குனரான ஷேக்கா அஸ்ஸா பின்ட் அப்துல்லா அல் நுவைமி இதுபற்றிப் பேசுகையில்,” அஜ்மானின் வசதி குறைந்த மற்றும் குறைவான ஊதியம் பெறும் மக்களுக்கு இந்த 4 மில்லியன் திர்ஹம்ஸ் தொகை பிரித்தளிக்கப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பமும் தலா 2000 திர்ஹம்ஸ் தொகைக்கான கார்டைப் பெறுவர். இதனைப் பயன்படுத்தி அஜ்மான் மார்கெட் கோ-ஆப்பரேட்டிவ் சொஸைட்டிகளில் தங்களின் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்” என்றார்.

ruler ajman
3 Shares
Share via
Copy link