அமீரகத்தின் உச்ச கவுன்சில் உறுப்பினரும் அஜ்மானின் ஆட்சியாளருமான ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுவைமி, அமீரகத்தில் சிறையில் தண்டனைக் காலத்தில் நல்ல முறையில் இருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 82 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவானது கைதிகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் அவர்களின் குடும்பங்களின் துன்பத்தைப் போக்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக அஜ்மானின் ஆட்சியாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் சிறைக் கைதிகள் திருந்துவதற்கும், மாறுவதற்கும், புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கும், மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் காரணமாக விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக இதே போன்று துபாய், ஷார்ஜா ஆட்சியாளர்களும் கைதிகளுக்கு விடுதலை செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.