UAE Tamil Web

அமீரக தேசிய தினம்: 43 சிறைக் கைதிகளுக்கு விடுதலை அளித்தார் அஜ்மான் ஆட்சியாளர்..!

ruler ajman

அமீரகத்தின் 50 வது தேசிய தினம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 43 சிறைக்கைதிகளுக்கு விடுதலை அளிக்க உச்ச சபையின் உறுப்பினரும், அஜ்மானின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி (Sheikh Humaid bin Rashid Al Nuaimi) உத்தரவிட்டுள்ளார். அஜ்மானில் உள்ள சிறைகளில் தங்களது தண்டனைக் காலத்தை கழித்துவரும் கைதிகளுள் நன்னடத்தையின் அடிப்படையில் தேந்தெடுக்கப்பட்ட 43 பேருக்கு விடுதலை அளிக்கப்படுகிறது.

இந்த கைதிகள் தங்களது குடும்பத்துடன் புது வாழ்வினைத் துவங்க உதவும் வகையில் அஜ்மான் ஆட்சியாளர் இம்முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை பெறும் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து சமுதாயத்தில் நல்முறையில் வாழ்ந்திட வாழ்த்துவதாக ஆட்சியாளர் தெரிவித்திருக்கிறார்.

ஆட்சியாளரின் இம்முடிவினைப் பற்றி கருத்து தெரிவித்த அஜ்மான் காவல்துறையின் தலைமைத் தளபதியான லெப்டினட் கர்னல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுவைமி (Sheikh Sultan bin Abdullah Al Nuaimi), ” மகிழ்ச்சியையும், சமுதாய ஒற்றுமையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் ஆட்சியாளரினால் எடுக்கப்பட்ட இந்த முடிவை வரவேற்கிறேன்” என்றார்.

இந்த கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் பணிகள் துரிதகதியில் நடைபெறும் என கர்னல் தெரிவித்தார்.

1 Share
Share via
Copy link
Powered by Social Snap