35.4 C
Dubai
May 25, 2020
UAE Tamil Web

கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர் – நிர்கதியான 6 உடன்பிறப்புகளின் செலவுகளை ஏற்பதாக அஜ்மான் ஆட்சியாளர் அறிவிப்பு!

ajman ruler

ஒரே மாதத்திற்குள் கொரோனாவால் தங்களது பெற்றோரை இழந்த சூடானைச் சேர்ந்த ஆறு உடன்பிறப்புகளின் செலவுகளை ஏற்பதாக உச்ச சபையின் உறுப்பினரும், அஜ்மானின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹுமாய்த் பின் ரஷித் அல் நுவைமி (Sheikh Humaid bin Rashid Al Nuaimi ) அறிவித்திருக்கிறார்.

பெற்றோரை இழந்த இந்த உடன்பிறப்புகளின் மனதை உலுக்கும் சோகக் கதை சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இவர்களின் கல்வி, வாழ்வு மற்றும் சமூகம் சார்ந்த அத்தனை செலவுகளையும் ஏற்பதாக ஷேக் அறிவித்துள்ளார்.

இஸ்லாம் போதிக்கும் ஆதரவில்லாதோருக்கு சகிப்புத்தன்மையுடன் உதவ வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலும், அமீரகப் பண்பாடான உதவி நாடும் ஏழைகளுக் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்னும் கடமையின் அடிப்படையிலும் அஜ்மான் ஆட்சியாளர் இம்முடிவை எடுத்துள்ளார்.

மேலும், இந்த ஆறு உடன்பிறப்புகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், அவர்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறும் அஜ்மான் ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.

மற்ற சில பதிவுகள்