சுயநலம் இல்லாமல் தன்னிடம் கிடைத்த பணத் தொகையை காவல்துறையிடம் ஒப்படைத்த மனிதருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
41 வயதான எகிப்து நாட்டைச் சேர்ந்த முகமது சயீத் முகமது என்பவர் அஜ்மானில் உள்ள சீன ஷாப்பிங் செண்டரின் வாகன நிறுத்துமிடத்தில் கட்டுக் கட்டாக பணத்தைப் பார்த்தார். கிடைத்த பணம் முழுவதையும் அந்த நேர்மையான நபர், காவல் நிலையத்திற்குச் சென்று ஒப்படைத்தார். அவரது நேர்மையைப் பாராட்டி காவல்துறையினர் அவரை கௌரவித்தனர்.
இதையடுத்து அஜ்மானில் உள்ள அல் ஜெர்ப் (Al Jurf) காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி கேப்டன் பைசல் மர்வன் அல் மாத்ருஷி இவரின் நேர்மையைப் பாராட்டி நேர்மைக்கான சான்றிதழ் ஒன்றை வழங்கினார்.
பணத்தை அதன் உரிமையாளரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த முகமதுவின் நேர்மைக்கு கேப்டன் அல் மாத்ருஷி நன்றி தெரிவித்ததோடு, பொதுமக்கள் அனைவரும் இவரின் நேர்மையை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
நேர்மையாக செயல்பட்ட நபர்களை பாராட்டி அவர்களை கௌரவிப்பது அஜ்மான் காவல்துறையின் கொள்கையில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது