UAE Tamil Web

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப்பட்ட புதிய கள மருத்துவமனை..!

Covid-hospital-in-Ajman

கொரோனாவால் மிதமாக மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக அஜ்மானில் புதிய கள மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 7,000 சதுர மீட்டருக்கு விரிந்துள்ள இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 46 படுக்கைகளும், மித மற்றும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக 156 படுக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

இங்கு 75 மருத்துவர்களும் 231 செவிலியர்களும் 44 தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களும் பணியாற்றிவருகின்றனர். அஜ்மானின் பட்டத்து இளவரசரான ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுவைமி அவர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மருத்துவமனையானது திறக்கப்பட்டது.

நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில்கொண்டு அமீரக அரசு எடுத்துவரும் பல்வேறு ஆக்கப்பூர்வ முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக இளவரசர் தெரிவித்தார். அதேபோல, குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமுடன் பின்பற்றவேண்டும் எனவும் இளவரசர் வலியுறுத்தினார்.

கொரோனா நோயாளிகளுக்காக அமீரக அரசால் வரும் வாரங்களில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட 7 மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும். இந்த மருத்துவமனைகள் மூலமாக 292 மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் உட்பட மொத்தம் 2,058 நோயாளிகள் தங்க வசதிகள் செய்யப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தின் கள மருத்துவமனைகள் முழுவதும் அபுதாபி சுகாதார நிறுவனமான சேஹா, சுகாதார மற்றும் நோய்த்தடுப்புத்துறை அமைச்சகம் மற்றும் அபுதாபி சுகாதாரத்துறை ஆகியவற்றால் மேற்பார்வையிடப்பட்டுவருகின்றன.

Covid-hospital-in-Ajman
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap