UAE Tamil Web

கொரோனா அச்சம்: பள்ளிகளில் வகுப்புகள் நடத்த இடைக்காலத் தடை: வெளிவந்த அவசர அறிவிப்பு..!

elearning-medium

அஜ்மானில் உள்ள நர்சரி, பள்ளிகள் மற்றும் பார்க் (Barq) ஆகிய இடங்களில் வழக்கமான கற்பித்தல் பணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பதாக கல்வித்துறை அமைச்சகம் மற்றும் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து அறிவித்துள்ளன.

- Advertisment -

நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முழுமையாக ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு கல்வித்துறை அமைச்சகம் மற்றும் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை பள்ளிகளை அறிவுறுத்தியுள்ளன.

சமீப காலமாக அமீரகத்தில் அதிகரித்துவரும் கொரோனா வழக்குகளின் காரணமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.