UAE Tamil Web

முக்கியச் செய்தி: துபாயைத் தொடர்ந்து அஜ்மானிலும் ரமலான் டெண்ட்களுக்கான உரிமம் ரத்து..!

-dubai-tent

கொரோனா காரணமாக அஜ்மானில் ரமலான் டெண்ட்களுக்கான உரிமத்தை அரசு ரத்து செய்திருக்கிறது. இருப்பினும் அஜ்மானில் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் மூலமாக இப்தார் உணவுகள் பாதுகாப்பான முறையில் எமிரேட்டில் வினியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கவும், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

இந்த எமிரேட்டில் உள்ள தொண்டு நிறுவனங்கள் உணவுகளைப் பெற்று தேவைப்படுவோருக்கு வினியோகிக்க அஜ்மான் தொண்டு நடவடிக்கைகள் மற்றும் அறக்கொடை ஒருங்கிணைப்பு கவுன்சில் (Ajman Charitable Activities and Endowments Coordination Council)-இடம் அனுமதி பெற்றிருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ரமலான் புனித மாதத்தில், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இப்தார் நேரத்தின்போது இலவச உணவினை மசூதிகள் வழங்கிட வேண்டும் என்பது மரபு.

இந்த ரமலானில், அஸ்ர் தொழுகைக்குப் பிறகு உணவு விநியோகம் நடக்கவேண்டும், மேலும் மக்ரிப் தொழுகைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே இப்பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய கவுன்சிலின் துணைச்செயலாளர் மரியம் அலி அல் மாமரி (Maryam Ali Al Maamari),” பெரும்பாலான தொழிலாளர்கள் மற்றும் வருமானம் குறைந்த மக்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவுகள் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

முன்னதாக துபாயிலும் ரமலான் டெண்ட்களுக்கு இந்தாண்டு உரிமம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.