UAE Tamil Web

அஜ்மான் – உம் அல் குவைன் இடையே பேருந்து சேவை மீண்டும் துவக்கம் – பயண நேரங்களைத் தெரிந்துகொள்வது எப்படி?

All-about-the-Ajman-to-Ras-Al-Khaimah-Bus-Cover-

அஜ்மான் மற்றும் உம் அல் குவைன் இடையேயான பேருந்துப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்படுவதாக அஜ்மான் போக்குவரத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

- Advertisment -

இதுகுறித்து அஜ்மான் போக்குவரத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “அஜ்மான் – உம் அல் குவைன் இடையேயான பேருந்து சேவை மீண்டும் துவங்கப்படுகிறது. மக்கள் பயண விபரங்கள் மற்றும் தங்களுக்குத் தேவையான தகவல்களைத் தெரிந்துகொள்ள 600599997 என்ற தொலைபேசிக்கு அழைக்கலாம். இல்லையெனில் அஜ்மான் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தினைத் தொடர்புகொள்ளலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் மஸார் (Masar) அப்ளிகேஷன் மூலமாகவும் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறலாம் என அஜ்மான் போக்குவரத்துத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.