UAE Tamil Web

கொரோனா இருக்கிறதா என்பதைக் கண்டறிய வந்துவிட்டது ஸ்மார்ட் ஹெல்மெட் – அசத்தும் அமீரக காவல்துறை..!

NAT-Smart-helmets n

கொரோனா நோயாளிகளைக் கண்டறிய அஜ்மான் காவல்துறையினர் ஸ்மார்ட் ஹெல்மெட்டினைப் பயன்படுத்தி வருகிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர் தொலைவில் இருக்கும்போதே அவர்களது உடல் வெப்பநிலையை வைத்து அவருக்கு நோய்த்தாக்குதல் இருக்கிறதா என்பதனை இந்த ஹெல்மெட் மூலம் கண்டுபிடிக்கலாம். போலவே, வாகனத்தின் நம்பர் பிளேட் மற்றும் நோய் பாதிக்கப்பட்டவரின் முகமும் பதிவு செய்யப்படுகிறது.

உட்கட்டமைப்புத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் செயல்வடிவம் பெற்ற இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த ஹெல்மெட் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலமாக மக்களை அதிவேகத்தில் ஸ்கேனிங் செய்கிறது.

இதுகுறித்துப் பேசிய அஜ்மான் காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவின் தலைமை இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் சைஃப் அப்துல்லா அல் ஃபலாசி,” மக்களின் வாழ்க்கைத்திறன், சமூக பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கொரோனா நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்டில் உள்ள சென்சார்கள் 5 மீட்டர் தொலைவில் வரும் நபர் ஹெல்மெட்டிற்கு முன்னால் தோன்றுகையில் அவரது உடல்வெப்பநிலையை ஸ்கேன் செய்யும் திறன் கொண்டது. இதனால் ஒரு நிமிடத்தில் 200 பேரை ஸ்கேன் செய்ய முடியும். 37.3 டிகிரி செல்சியசிற்கு அதிகமாக உடல் வெப்பநிலையை கொண்டவர்களையும் இந்த ஹெல்மெட் மூலம் ஸ்கேன் செய்யலாம். அப்படி அதிக உடல் வெப்பநிலையுடன் கண்டறியப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியோடு அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள்” என்றார்.

Image Credit: Ajman Police

நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் இந்த ஹெல்மெட் மூலமாக அஜ்மானின் முக்கிய சுற்றுலா மற்றும் வணிகத் தலங்களில் விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் என மொத்தம் 778 கடைகளில் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றிருப்பதாக ஃபலாசி தெரிவித்தார். பலசரக்கு மளிகைக் கடைகள் உட்பட இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது.

இதுவரையில் 33,910 மக்கள் இந்த ஹெல்மெட் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பணிகளின் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து 18,740 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக ஃபலாசி குறிப்பிட்டார்.

இந்த கணக்கெடுப்புப் பணிகளின்போது பொது இடங்களில் முகக்கவசம் அணியும் விதிமுறையை மீறியதாக 2,031 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

NAT-Smart-helmets n
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap