UAE Tamil Web

மின்சார வாகன ஓட்டுநர்களுக்காக புதிய சேவையை அறிமுகம் செய்த அமீரக போலீஸ் ஸ்டேஷன்.!

charge

மின்சார வாகனங்களை வைத்திருக்கும் வாகன ஓட்டிகள் இப்போது தங்கள் வாகனங்களுக்கு அஜ்மானில் உள்ள அல் நுவைமியா காவல் நிலையத்தில் சார்ஜ் ஏற்றி கொள்ள முடியும் என்று அஜ்மான் காவல்துறை கூறியுள்ளது.

- Advertisment -

இந்த நடவடிக்கை பசுமை வளர்ச்சிக்கான அமீரகத்தின் முயற்சிகள் மற்றும் பசுமை பொருளாதாரத்தை நோக்கி செல்லும் அஜ்மான் 2021 மூலோபாயத்திற்கு(strategy) ஏற்ப எடுக்கப்பட்டுள்ளது.

அல் நுவைமியா காவல் நிலையத்தின் தலைவரான லெப்டினன்ட் கர்னல் முகமது அப்துல்லா அபு ஷிஹாப் இது பற்றி தகவல் தெரிவிக்கையில்,’மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் சாதனத்தை வழங்குவதற்கான இந்த முயற்சி “ஒரு மணிநேர”(One Hour) முயற்சியின் ஒரு பகுதியாகும். எலக்ட்ரிக் கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கான சார்ஜிங் சாதனத்தை, காவல் நிலைய வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்’ என்றார்.

இந்த புதிய முயற்சி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் மின்சார வாகனங்களை பயன்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.