UAE Tamil Web

இந்த எமிரேட்டிலும் இனி கொரோனா பரிசோதனை கட்டாயம் – அரசு அறிவிப்பு..!

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah

அஜ்மானில் உள்ள அனைத்து அரசுப் பணியாளர்களும் ஒவ்வொரு 7 நாட்களுக்கும் தங்களது சொந்த செலவில் கொரோனா PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாதவர்கள் என சான்று பெற்றவர்களும் தங்களது சொந்த செலவில் ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறை PCR பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த நடைமுறை பிப்ரவரி 2 ஆம் தேதிமுதல் பயன்பாட்டிற்குவரும் என அஜ்மான் மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்திருக்கிறது.

அஜ்மான் பொதுத்துறைப் பணியாளர்கள், அவுட்சோர்சிங் மூலமாக பணிபுரிபவர்கள் மற்றும் அஜ்மான் அரசுத் துறைகளில் உள்ள ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் மேற்கண்ட விதிமுறைகள் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜ்மான் அரசு அலுவலகங்களுக்கு வருகைதரும் ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை எடுத்துவரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமீரக அரசுத் துறை மற்றும் பெடரல் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களும் ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என வெளிவந்த அறிவிப்பை முன்னிட்டு இந்த அறிவிப்பை அஜ்மான் அரசு வெளியிட்டிருக்கிறது.

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap