UAE Tamil Web

அஜ்மான்: இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் வாரமொருமுறை கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்..!

Coronavirus PCR test

அஜ்மானில் குறிப்பட்ட சில நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் கட்டாயம் வாரமொருமுறை PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அஜ்மான் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கீழ்க்கண்ட இடங்களில் பணிபுரியும் நபர்கள் வாரமொருமுறை PCR பரிசோதனையை எடுத்திருத்தல் வேண்டும்.

  • ரெஸ்டாரன்ட் மற்றும் கஃபே
  • சூப்பர்மார்கேட்கள்
  • விளையாட்டு அரங்கங்கள்
  • சலூன்கள்
  • தொழிலாளர் ஆட்சேர்ப்பு அலுவலகங்கள்
  • உணவு டெலிவரி நிறுவனங்கள்
  • கார் கழுவும் இடங்கள்

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அவர்கள் அனைவரும் AlHosn அப்ளிகேஷனை தங்களது மொபைல் போனில் தரவிறக்கியிருக்க வேண்டும்.

இதனை ஆய்வு செய்யும் பணிகள் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coronavirus PCR test
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap