அஜ்மான் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எமிரேட்டில் உள்ள கஃபேக்கள், ரெஸ்டாரன்ட்களை தினசரி இரவு 11 மணிக்கு மூட உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்த நடைமுறை இன்று (பிப்ரவரி 23) முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும் ஃபாஸ்ட்புட் வழங்கும் கஃபேக்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களுக்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டெலிவரி சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக உணவகங்கள் இரவு 12 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது இந்த நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்கும் விதமாக தற்போது அஜ்மானிலும் இந்த விதிமுறை அமல்படுத்தப்படுகிறது.
அஜ்மானிலும் அமீரகத்திலும் அறிவிக்கப்பட்ட புதிய கோவிட் பாதுகாப்பு விதிகளின் வரிசையில் இது சமீபத்தியது ஆகும்.