அஜ்மானில் உள்ள ஷாப்பிங் செண்டர் ஒன்று அதிரடித் தள்ளுபடியை அறிவித்ததும் போதும், மக்கள் அங்கே அலைமோதத் துவங்கினர். இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த அஜ்மான் காவல்துறை, அந்த ஷாப்பிங் செண்டரை மூட உத்தரவிட்டுள்ளது.
ஷாப்பிங் செண்டர் உரிமையாளருக்கு 5000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடைபெற்ற, ஷாப்பிங் தள்ளுபடி திருவிழா வீடியோ ஒன்றினையும் அஜ்மான் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
فريق الازمات والكوارث والطوارئ بعجمان يغلق محل ويغرمه 5000 درهم بسبب الازدحام pic.twitter.com/xHvcvpyd9K
— ajmanpoliceghq (@ajmanpoliceghq) March 6, 2021
அஜ்மான் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், காவல்துறை ஆகியவை அனைத்து ஷாப்பிங் மையங்களும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.