UAE Tamil Web

அஜ்மான்: கபேக்கள் இயங்கும் நேரத்தில் மாற்றம் – அரசு அறிவிப்பு..!

restaurent

அஜ்மானில் உள்ள கபேக்கள் இரவு 1 மணிவரையிலும் திறந்திருக்கலாம் என அஜ்மான் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக கபேக்களை இரவு 11 மணிக்குள் மூட ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

வரும் மார்ச் 15 ஆம் தேதிமுதல் இந்த நடைமுறை அமலுக்குவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கபேக்கள் பணியாளர்கள் அனைவரும் வாரமொருமுறை கொரோனா PCR பரிசோதனை எடுத்திருக்கவேண்டும்.
  • இரண்டு டேபிள்களுக்கு இடையே குறைந்தபட்சம் 2 மீட்டர் இடைவெளி விடவேண்டும்.
  • ஒரு டேபிளுக்கு 4 பேரை மட்டுமே அனுமதிக்கவேண்டும்.

போன்ற விதிமுறைகளை கபேக்கள் பின்பற்றவேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

restaurent
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap