UAE Tamil Web

அமீரகத்தில் சிறிய விபத்துகளை பற்றி வாகன ஓட்டிகள் ரிப்போர்ட் செய்ய புதிய வழி.! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது..

ajman

அமீரகத்தில் சிறிய விபத்துகளை பற்றி வாகன ஓட்டிகள் ரிப்போர்ட் செய்ய புதிய வழி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள புதிய ஆப் ஒன்றை பயன்படுத்தி இனி அஜ்மான் வாகன ஓட்டிகள் தாங்கள் சிக்கும் சிறு விபத்துக்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யலாம்.

- Advertisment -

அஜ்மான் போலீஸ் மற்றும் சயீத் ஃபார் டிராஃபிக் சிஸ்டம்ஸ் ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ள சயீத் ஸ்மார்ட் அப்ளிகேஷன்(Saaed Smart Application) நவம்பர் 11 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. விரைவான மற்றும் பயன்படுத்த எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது சயீத் ஸ்மார்ட் ஆப்.

சிறிய விபத்து ஏற்பட்டால் விபத்து தளத்திலிருந்து நேரடியாக தேவையான நடைமுறைகளை மேற்கொள்ள பயன்பாட்டாளர்களை இந்த ஆப் அனுமதிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். எளிய வழிமுறைகள் மூலம், விபத்து குறித்த அடிப்படை தரவு மற்றும் இருப்பிடத்தை இன்டராக்ட்டிவ் மேப்(interactive map) மூலம் இந்த ஆப் கேட்கும்.

கூடுதலாக இந்த ஆப்பில் விபத்தால் ஏற்பட்ட சேதத்தின் விவரங்கள் மற்றும் படங்களை சில நிமிடங்களில் பதிவேற்ற முடியும். இந்த செயல்முறைகள் முடிந்ததும், ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள் மூலம் கோரிக்கையை பெற்றதற்கான ரசீது அனுப்பப்பட்டு விபத்து அறிக்கை வழங்கப்படுகிறது.