UAE Tamil Web

அல் அய்னில் டிரைவ் இன் கொரோனா பரிசோதனை மையம் திறப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமீரக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சேஹா அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டிரைவ் இன் கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்து வருகிறது. ஏற்கனவே 24 டிரைன் இன் மையங்கள் அமீரகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள நிலையில் தற்போது 25வது மையமாக அல் அய்வில் உள்ள அல் ஆமேரா பகுதியில் டிரைவ் இன் கொரோனா பரிசோதனை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். அதோடு கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளலாம். தடுப்பூசி செலுத்த விரும்புவோர் முன்கூட்டியே சேஹா செயலியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த டிரைவ் இன் கொரோனா பரிசோதனை மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல் அய்னில் ஏற்கனவே அல் ஹில்லி, அஷ்ரஜ், அல் ஷரூஜ் பகுதிகளில் டிரைவ் இன் மையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

1 Share
Share via
Copy link