UAE Tamil Web

துபாயில் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் அல் மக்தூம் விமான நிலையம்

அமீரகத்தில் கோவிட் -19 தொற்றுநோய்க்கு குறைந்து வருவதால் துபாயின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான அல் மக்தூம் விமான நிலையம் மே மாதம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஇது குறித்து துபாய் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் கூறுகையில், அல் மக்தூம் விமான நிலையத்தின் விமான வழித்தடம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும்போது இரண்டு ஓடுபாதைகளில் ஒன்றை 45 நாட்களுக்கு மூடப்படும். 45 நாட்களுக்குப் பிறகு அல் மக்தூம் விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 இல் கான்கோர்ஸ் ஏ இன் இறுதிக் கட்டத்தைத் திறந்த பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 100 சதவீத திறனில் செயல்படத் தொடங்கியது.

துபாய் விமான நிலையம் 2021 ஆம் ஆண்டில் 29.1 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்திர போக்குவரத்தை எட்டி, 8 ஆண்டாக சர்வதேச பயணிகள் எண்ணிக்கையில் உலகின் பரபரப்பான விமான நிலையமாக தொடர்ந்து சாதனைப் படைத்துள்ளது.

2021 ஆம் ஆண்டு துபாய் விமான நிலையம் மூலம் வருகை புரிந்தவர்களில் அதிகப்படியானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

6 Shares
Share via
Copy link