UAE Tamil Web

6 கிலோ கஞ்சாவுடன் துபாய் விமான நிலையத்தில் சிக்கிய இந்தியப் பெண் – விசாரணை தீவிரம்..!

Stock-Dubai-airport-

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 42 வயது இந்தியப் பெண் ஒருவர் 6 கிலோ கஞ்சாவை தனது பையில் வைத்து கொண்டுவந்திருக்கிறார்.

சுங்கத்துறை பரிசோதனையின்போது தனது பையில் இருந்த வெள்ளை நிறப் பகுதியை அதிகாரியிடம் தர மறுத்திருக்கிறார் இந்தியப்பெண். நீர் சுத்திகரிப்பான் (water softener) – ன் அட்டைப்பெட்டியில் கச்சிதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இதனையடுத்து போதைப்பொருள் தடுப்பு மற்றும் துபாய் காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. பயணிக்கு போதை மருந்து பரிசோதனை எடுத்ததில் நெகட்டிவ் என வந்திருக்கிறது.

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரையில் இந்தியப்பெண் காவல்துறை கட்டுபாட்டில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stock-Dubai-airport-
0 Shares
Share via
Copy link