UAE Tamil Web

வேகம் வேண்டாம் வாகனவோட்டிகளை எச்சரிக்கும் அபுதாபி காவல்துறை..!

fog in UAE

அமீரகத்தின் பெரும்பாலான இடங்களில் பனிமூட்டம் இருக்கும் என்பதால் வாகனவோட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்குமாறு அபிதாபி காவல்துறை எச்சரித்திருக்கிறது.

- Advertisment -

தேசிய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்று காலை 10 மணி வரையிலும் பரவலாக பனிமூட்டம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திற்கும் குறைவாகவே மட்டுமே வாகனங்களை இயக்கவேண்டும். வாகனக் கோளாறு அல்லது விபத்து ஏற்பட்டால் மட்டுமே ஆபத்து எச்சரிக்கை விளக்குகளை (hazard warning lights) எரியவிடவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் எலெக்ட்ரானிக் தகவல் பலகைகளில் உள்ள வேக அளவுகளை வாகனவோட்டிகள் பின்பற்றவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு வாகனங்களுக்கு இடையே இடைவெளி விடுதல் போன்ற முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மக்கள் பாதுகாப்பு கருதி அவசியம் பின்பற்றவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம் ஏற்படும் காலங்களில் எப்படி கவனமாகவும் பாதுகாப்பாகவும் வாகனங்களை இயக்கவேண்டும் என சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் வானிலை நிலவரங்களை அறிந்து முன்னெச்சரிக்கையுடன் பயணம் செய்யுமாறு வாகனவோட்டிகளை அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.