UAE Tamil Web

Alhosn அப்ளிகேஷன் முடங்கியது: அபுதாபிக்குள் நுழைய புதிய விதிமுறைகள் வெளியீடு..!

alhosn

அபுதாபியில் பொது இடங்களுக்குச் செல்ல, Alhosn அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் இருத்தல் வேண்டும் என தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. ஜூன் 15 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில் நேற்று Alhosn அப்ளிகேஷன் தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது. இதனால் பல பயனர்களால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தமுடியாமல் போனது.

இதனையடுத்து அபுதாபிக்குள் நுழைபவர்கள் மற்றும் பொது இடங்களுக்குச் செல்பவர்களில் Alhosn அப்ளிகேஷனை பயன்படுத்த முடியாமல் போனவர்கள் தங்களது PCR பரிசோதனைக்கான முடிவுகளை SMS மூலமாகக் காட்டினால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறை ஜூன் 18 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. Alhosn அப்ளிகேஷனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரையில் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு பொது இடங்களுக்குச் செல்ல கிரீன் பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் Alhosn அப்ளிகேஷன் சரிசெய்யப்பட்ட பின்னர் கிரீன் பாஸ் நடைமுறை பயன்பாட்டிற்கு வரும் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

alhosn
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap