UAE Tamil Web

அபுதாபி: அனைத்து பொதுப் பேருந்து ஓட்டுனர்களும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்கள் – ITC அறிவிப்பு..!

Abu-Dhabi-bus-driver_

அபுதாபியில் உள்ள அனைத்து பொதுப் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் 80 சதவீதத்திற்கும் அதிகமான டாக்ஸி ஓட்டுனர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டதாக அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்துள்ளது.

சேஹா, அபுதாபி சுகாதாரத்துறை, நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு 1,460 பொதுப் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் 5,706 டாக்ஸி டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி போக்குவரத்தின் அங்கங்களாக செயல்படும் அனைத்து போக்குவரத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கிடும் நோக்கில் இத்திட்டம் துவங்கப்பட்டதாக ITC தெரிவித்துள்ளது.

மீதமுள்ள டாக்ஸி டிரைவர்களும் தங்களுடைய மற்றும் சமூக பாதுகாப்பினை கருத்தில்கொண்டு தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு ITC அழைப்புவிடுத்துள்ளது.

கொரோனா பரவத் துவங்கியதில் இருந்து தினசரி வாகனங்களை சுத்திகரித்தல், சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்துதல், டாக்சிக்களில் ஆன்லைன் வழியாக பணம் செலுத்த அறிவுறுத்துதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ITC தொடர்ந்து எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Abu-Dhabi-bus-driver_
0 Shares
Share via
Copy link