UAE Tamil Web

தொடரும் கொரோனா பாதிப்புகள்.! அமீரகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்..

UAQ

அமீரகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடரும் நிலையில் கோவிட்-19 தொடர்பான பாதுகாப்பு விதிகளை கடுமையாக்கியுள்ள ஆறாவது எமிரேட்டாக உம் அல் குவைன் மாறியுள்ளது.

மால்கள் மற்றும் கடற்கரைகள் உள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் கூடும் மக்களின் திறனை உம் அல் குவைன் குறைத்துள்ளது. புதிய விதிகள் இன்று முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உம் அல் குவைனில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள் பின்வருமாறு:

  • மால்கள் அதன் 60% திறனில் மட்டுமே இயங்க வேண்டும்.
  • மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இசை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன
  • உணவகங்களில் ஒரு டேபிளுக்கு அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே அமர வேண்டும்
  • திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் 10-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்க கூடாது
  • இறுதிச் சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது
  • கடற்கரைகள் மற்றும் பூங்காக்களின் திறன் 70% ஆக குறைக்கப்பட்டுள்ளது
  • சினிமா ஹால்களின் திறன் 50% ஆக குறைக்கப்பட்டுள்ளது
  • ஜிம்கள் மற்றும் ஃபிட்னஸ் சென்டர்கள் 50% திறனை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.

UAQ
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap