37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

ஷார்ஜா : 3 ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்து கொரோனா நோயாளிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அறிவிப்பு..!

sharjah

ஷார்ஜாவில் 3 ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்து கொரோனா நோயாளிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக எமராட் அல் யோம் (Emarat Al Youm) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷார்ஜா மருத்துவ பகுதிகளின் இயக்குனரான திரு. முகமது அல் சரூனி (Mohammed Al Zarooni) இதுகுறித்துப் பேசுகையில்,” மூன்று ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்து கொரோனா நோயாளிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் ஒரேயொரு ஹோட்டலில் சில கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இருக்கின்றனர். அவர்களும், விரைவாக குணமடைந்துவருகிறார்கள்” என்றார்.

கொரோனா நோய்த் தாக்கம் துவங்கிய போதே, ஷார்ஜா முழுவதிலும் கொரோனா பரிசோதனை எடுக்கும் விதமாக, அந்த எமிரேட் முழுவதும் சுமார் 500,000 பரிசோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா நோய்த்தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, தினமும் 1,500 – 2,000 கொரோனா பரிசோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டுவருகிறார்கள். ஷார்ஜாவின் பல்வேறு பகுதிகளில் இலவச கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் விதமாக மருத்துவ மற்றும் பரிசோதனை மையங்கள் நிறுவப்படும் என சரூனி தெரிவித்தார்.

இதையும் படிங்க.!