34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அபுதாபி : அல் தஃப்ரா-வில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனைகளாக மாறியதாக சுகாதாரத்துறை அறிவிப்பு!

Al-Tawam-Hospital_

அபுதாபி : அல் தப்ஃரா – வில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகள் இல்லா மருத்துவமனைகளாக மாறியிருப்பதாக அபுதாபி சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

மதினாத் சயீத் (Madinat Zayed), தல்மா (Dalma), அல் மர்ஃபா (Al Marfa), கயாதி (Ghayathi), லிவா (Liwa), அல் சிலா (Al Sila) மற்றும் ருவைஸ் மருத்துவமனைகள் (Ruwais Hospitals) தொடர்ந்து தங்களது சிறப்பான மருத்துவ சேவைகளை அனைத்து நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றன.

தேசிய பரிசோதனைத் திட்டம் மற்றும் சுகாதாரத் துறையினரின் அயராத உழைப்பினால் இந்த மைல்கல் எட்டப்பட்டிருக்கிறது. மேலும், மருத்துவ உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்ததற்கும் இந்த இரண்டு அமைப்புகளே காரணமாகும்.

அபுதாபியில் உள்ள ஏடிஎன்இசி கள மருத்துவமனை (ADNEC field hospital), ஷேக் ஷக்பவுட் மெடிக்கல் சிட்டி (Sheikh Shakhbout Medical City), தவாம் மருத்துவமனை (Tawam hospital), மெடிகிளீனிக் மருத்துவமனைகள் (Mediclinic hospitals) மற்றும் முபதலா சுகாதார நிறுவனங்கள் (Mubadala Healthcare facilities) ஆகியவை கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனைகளாக மாறியிருப்பதாக அபுதாபி சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.

அபுதாபியின் அனைத்து மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சியாலேயே இந்த இலக்கு எட்டப்பட்டிருப்பதாகவும், இதனால் அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அபுதாபி சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

அபுதாபி சுகாதாரத்துறை, சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் சமூக விலகலைக் கடைபிடித்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!