UAE Tamil Web

அபுதாபி: கொரோனா நோயாளிகள் இல்லாதவையாக மாறிய தனியார் மருத்துவமனைகள்..!

al dar shifaa hospital

அபுதாபியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட இல்லை என அபுதாபி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இனி அல் ரஹ்பா மருத்துவமனை, அல் அய்ன் சிட்டியில் உள்ள அல் அய்ன் மருத்துவமனை மற்றும் அபுதாபியில் உள்ள பிற கள மருத்துவமனைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்காக செயல்படும் என அபுதாபி சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டியில் கொரோனா நோயாளிகள் யாருமில்லாத காரணத்தினால் அங்கே கொரோனா அல்லாத பிற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அல் ரஹ்பா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைக் கையாழும் விதமாக அங்குள்ள மொத்த படுக்கைகளின் எண்ணிகையை 250 ஆக உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 140 சாதாரண படுக்கைகள், அவசர சிகிச்சைப் பிரிவினருக்கான 37 படுக்கைகள், 73 அறுவை சிகிச்சை பெறுபவர்களுக்கான படுக்கைகள் ஆகியவை அடக்கம்.

அமீரகத்தில் கடுமையாகப் பின்பற்றப்படும் கொரோனா விதிமுறைகளும் கொரோனா தடுப்பூசித் திட்டம் தொய்வில்லாமல் நடைபெறுவதுமே இந்த சூழ்நிலை உருவாகக் காரணம் என சுகாதாரத் துறையின் துணைச் செயலாளர் டாக்டர். ஜமால் முகமது அல்காபி தெரிவித்தார்.

al dar shifaa hospital
0 Shares
Share via
Copy link