துபாயில் மாலில் உள்ள ஒரு கடையில் பணத்தை திருடியதற்காக 43 வயதான ஆசிய நாட்டை சேர்ந்தவருக்கு துபாய் குற்றவியல் நீதிமன்றம் 3 மாதம் சிறைத் தண்டனையும் 113,000 அபராதமும் விதித்துள்ளது.
நவம்பர் 2021 இல் மெரினா மாலில் உள்ள ஒரு துணிக்கடையின் மேலாளர், தனது கடையிலிருந்து 113,000 திர்ஹம்ஸ் திருடப்பட்டதாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தார். விசாரணையின் போது, அக்கடையின் மேலாளர் மற்றும் இரண்டு ஊழியர்கள் கணக்கை சரிபார்க்க இருந்தபோது கல்லா பெட்டியில் உள்ளே பணத்தை காணாமல் போய்விட்டதாக அவர் கூறினார்.
அந்த கடையில் பணிபுரியும் விற்பனை ஊழியரிடம் மாற்று சாவி இருப்பதாகவும், ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் மேலாளர் தெரிவ்த்தார்.
புகாரின் பேரில் காவல்துறை உடனடியாக கடைக்கு வந்து திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
காவல்துறை பதிவுகளின்படி, ஆதாரங்களை சேகரித்து, மால் மற்றும் கடையில் உள்ள கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தது. அப்போது விற்பனை ஊழியர் மற்ற ஊழியர்களுடன் கடையை விட்டு வெளியேறியதை கேமரா காட்சிகள் காட்டியது. அதன் பின்னர் அவர் தனியாக திரும்பி, கடைக்குள் சென்று சில நிமிடங்களில் பையை எடுத்துக்கொண்டு கடையின் கதவை மூடிவிட்டு மாலில் இருந்து வெளியேறுவது தெரிந்தது.
திருட்டு சம்பவம் ஏற்பட்ட அதே நாளில் ஊழியர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட விற்பனை ஊழியர் அமீரகம் திரும்பியபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது இந்த குற்றத்துடன் தனக்குத் தொடர்பை இல்லை என்று தெரிவித்தார். கடையில் உள்ள கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த ஊழியர்தான் பணத்தை திருடியதாக உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவருக்கு துபாய் குற்றவியல் நீதிமன்றம் 3 மாதம் சிறைத் தண்டனையும் 113,000 அபராதமும் விதித்துள்ளது. மேலும் தண்டனைக் காலம் முடிந்த பிறகு அந்த நபர் நாடு கடத்தப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.