துபாயின் 65வது வாராந்திர மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் இந்தியர் ஒருவர் 1 லட்சம் திர்ஹம்ஸை பரிசாக வென்றுள்ளார்.
குவைத்தில் பணிபுருந்து வரும் இந்தியரான முகமது, தனது பரிசுத் தொகையை கடன்களைத் தீர்க்கவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
35 வயதான முகமது ஃபயர் அலாரம் டெக்னிசியனாக குவைத் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் வெற்றிபெற்றது குறித்து அவர் கூறுகையில், ” ஒரு வருடத்திற்கு முன்பு குடும்பத் தேவைக்காக கடன் வாங்கினேன். இதில் வெற்றிபெற்ற தொகையின் ஒரு பகுதி கடனை தீர்க உதவும், இதனால் எனது நிதிச்சுமை வெகுவாகக் குறையும்” என்றார்.
“மஹ்சூஸ் ரேஃபிள் டிராவில் வெற்றிப் பெற்றதாக எனக்கு மெயில் வந்தது, அதனை கண்டு நான் அடைந்த மகிழ்ச்சியை என்னால் விவரிக்க முடியாது. நான் முதலில் என் மனைவிக்கு தொடர்புக் கொண்ட பிறகு எனது சக ஊழியர்களிடம் செய்தியை பகிர்ந்து கொண்டேன். அனைவரும் உற்சாகத்துடன் என்னை கட்டி அணைத்தனர்” என்று முகமது கூறினார்.