அமீரகத்திற்கு போலியான விசா வழங்கிய இந்தியர் மூவர் கைது.!

அமீரகத்திற்கு போலியான வேலையுடன் கூடிய விசா வழங்கிய இந்திய நாட்டை சேர்ந்த மூவர் கைது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாங்கி தருவதாக போலியான விசா மூலம் 17 பேர்களை ஏமாற்றிய பஞ்சாப் பகுதியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். ராஜேஷ் குமார் (38), பிரேம் குமார் (35) மற்றும் காகந்தீப் சிங் (31) ஆகியோர் கடந்த 22 ஆம் தேதி டெல்லி போலீஸாரால் அவர்கள் பதுங்கி இருந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

மேலும், இவர்கள் தங்களது உறவினர்கள் சிலரை இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ராஜஸ்தான் செய்தித்தாளில் அமீரகத்திற்கு வேலையுடன் விசா வாங்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதன் காரணமாக அந்த அப்பாவிகள் 17 பேர் இந்த மோசடிகாரர்களின் வலையில் சிக்கியுள்ளனர்.

இதுபோன்ற மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளது, ஆகையால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Source: Khaleej Times

Loading...