UAE Tamil Web

ஷேக் ஜயீத் கிராண்ட் மசூதியில் நடைபெறும் ஈத் அல் ஃபித்ர் தொழுகை நேரம் அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரக அரசு வரவிருக்கும் ஈத்-அல்-பித்ர் பெருநாளுக்காக கோவிட்-19 பாதுகாப்புக்காக புதிய கட்டுப்பாடுகளை தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமான (NCEMA) அறிவித்துள்ளது.

அதில் வழிபாட்டாளர்கள் அதிகாலை ஈத்-அல்-பித்ர் தொழுகைக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அபுதாபி ஷேக் ஜயீத் கிராண்ட் மசூதியிலும் அல் அய்ன் ஷேக் கலீஃபா கிராண்ட் மசூதியிலும் ஈத் தொழுகைகள் காலை 7:00 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமீரகத்தில் உள்ள எமிரேட்டுகளில் ஈத்-அல்-பித்ர் தொழுகைக்கான நேரங்கள் அறிவிக்கப்பட்டன.

  • துபாயில் காலை 05.59 மணி.
  • அபுதாபியில்  காலை 06:03 மணி.
  • ஷார்ஜாவில் காலை 05:58 மணி.
  • அஜ்மானில் காலை 05:58 மணி.
  • ரஸ் அல் கைமாவில் காலை 05:56 மணி.
  • உம் அல் குவைனில்  காலை 05:57 மணி.
  • புஜைராவில் காலை 05:58 மணி.
  • அல் ஐனில் காலை 05:57 மணி.
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap