UAE Tamil Web

அபுதாபியில் தனியார் பள்ளிகளுக்கு பெருநாள் விடுமுறை அறிவிப்பு.. உற்சாகத்தில் மாணவர்கள்!

அபுதாபியின் தனியார்  பள்ளி மாணவர்களுக்கு ஈத் அல் பித்ர் (பெருநாள்)  விடுமுறை ஐந்து நாட்கள் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்டின் தனியார் கல்வி மற்றும் அறிவுத்துறை, மே 2 திங்கள் முதல் மே 6 வெள்ளி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்தது.

கோவிட்-19 பாதுகாப்பு

இடைவேளைக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பும் போது, மாணவர்கள் கோவிட்-19 தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

“அவர்கள் தங்கள் வயது வகைக்கு ஏற்ப Al Hosn ஆப் பயன்பாட்டில் தங்கள் கிரீன் பாஸ் நிலையை பராமரிக்க வேண்டும்” என்று அபுதாபி தனியார் கல்வி மற்றும் அறிவுத்துறை கூறியுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap