ரமலான் மாதம் 26 நாட்களை கடந்துவிட்ட நிலையில் அமீரகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அபுதாபியில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பெருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலியயில் தற்போது ஷார்ஜாவும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈத் அல் பித்ர் (பெருநாள்) விடுமுறை ஐந்து நாட்கள் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா தனியார் கல்வி ஆணையமான (SPEA), ஏப்ரல் 30 சனிக்கிழமை முதல் மே 5 வியாழன் வரை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது.
அத்துடன் மாணவர்களுக்கு வார இறுதி நாட்கள் உட்பட 9 நாள் விடுமுறையாகும். மேலும் மே 9 திங்கள் முதல் வகுப்புகள் மீண்டும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.