UAE Tamil Web

அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் மீண்டும் துவங்கப்படுவதாக அறிவிப்பு

சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை இந்தியா திரும்பப் பெற்றதால் அமீரகத்தில் இருந்து இயக்கப்படும் பல விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது.

அபுதாபில் இருந்து பல்வேறு இந்திய நகரங்களுக்கு இடையே Go First, Air India Express, Air India மற்றும் IndiGo உள்ளிட்ட விமானங்களின் விமானங்கள் இதில் அடங்கும்.

அபுதாபி, அல் அய்ன், துபாய் மற்றும் ஷார்ஜாவிலிருந்து மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ, அமிர்தசரஸ், அகமதாபாத், இந்தூர், கொச்சி, திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு, திருச்சி மற்றும் மங்களூரு உள்ளிட்ட இந்திய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் இதில் அடங்கும்.

கொரோனா தொற்று நோய் காரணமாக மார்ச் 23, 2020 முதல் இந்தியா சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளை நிறுத்தியது. ஆனால் செப்டம்பர் 2020 இல், பல்வேறு நகரங்களுக்கு இடையே விமானங்களை அனுமதிக்கும் வகையில், 37 நாடுகளுடன் ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, மார்ச் 27 முதல் சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா டிவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap