ரமலான் மாதம் 20 நாட்களை கடந்துவிட்ட நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் ரமலானின் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதமான ஷவ்வால் 3 ஆம் தேதி வரையில் ஈத் அல் பித்ர் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
Eid Al-Fitr Holiday for the Federal Government is from the 29th of #Ramadan to 3rd of Shawwal pic.twitter.com/S26uWL460r
— FAHR (@FAHR_UAE) April 21, 2022
தனியார் துறை ஊழியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒரு முறைப்படி விடுமுறை நாட்கள் அளிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாமிய மாதங்களில் 29 அல்லது 30 நாட்கள் மட்டுமே உண்டு. இந்த ரமலான் மாதம் 29 நாட்களுடன் முடிந்தால் 4 நாட்கள் விடுமுறையும் 30 நாட்களுடன் முடிந்தால் 5 நாட்கள் விடுமுறையும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.