UAE Tamil Web

பார்வையாளர்களின் வரவேற்பை பெற்ற அய்ன் துபாய் மூடப்படுவதாக அறிவிப்பு

அய்ன் துபாய் இன்று முதல் ரமலான் மாதம் இறுதி வரையிலும் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாவது, அய்ன் துபாய் இன்று முதல் ரமலான் மாதம் இறுதி வரை மூடப்படுவதாகவும், ஈத் அல் பித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை நாட்களுக்கு அய்ன் துபாயை மீண்டும் திறக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அய்ன் துபாய் மேம்பாட்டு பணிக்காக தாற்காலிகமாக மூடப்படுவதாகவும், வாடிக்கையாளர் குழுவுடன் இணைந்து வித்தியாசமான சலுகைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி புளூவாட்டர்ஸ் தீவு எனப்படும் இந்த அய்ன் துபாய் கோலாகலமாக வான வேடிக்கையுடன் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap