UAE Tamil Web

அமீரகத்தில் மீண்டும் நிலநடுக்கம் – ஒரே வாரத்தில் 3 நிலநடுக்கங்களைச் சந்தித்த அமீரகம்..!

EARTHQUAKE

அமீரகத்தில் நேற்று இரவு 8.34 மணிக்கு திப்பா, புஜைரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. அமீரகத்தில் ஒரே வாரத்தில் ஏற்படும் 3 வது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக திங்கட்கிழமை புஜைராவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதுகுறித்துப் பேசிய தேசிய வானிலை ஆய்வுமையத்தின் நில அதிர்வுப் பிரிவு இயக்குனர் கமிஸ் எல்ஷம்சி,”திப்பா, மஸாஃபி, கோர்ஃபக்கான் நகரம், புஜைரா நகரத்திற்கு எதிரேயுள்ள ஓமான் கடல், கல்பா ஆகிய பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நிலநடுக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்பகுதியில் நிலத்திட்டுக்கள் நகர்வதால் இவை நேர்கின்றன. பொதுவாக அமீரகத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 2-5 வரையிலுமே இருக்கின்றன. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது” என்றார்.

கடந்த பத்தாண்டுகளில் லேசான மற்றும் மிதமான நிலநடுக்க அதிர்வுகளை இந்த மையம் கண்காணித்துவருகிறது. இது இயற்கையான நிகழ்வுதான் இதனால் மக்கள் பயம்கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.