UAE Tamil Web

கொரோனா தடுப்பூசியைப் பெற முன் அனுமதி அவசியம்..!

vaccination

உம் அல் குவைனில் வசிக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுவதற்கு முன்பாக கண்டிப்பாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisment -

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவானது உம் அல் குவைன் காவல்துறை தளபதி (உள்ளூர் அவசர நெருக்கடி மற்றும் மேலாண்மை குழுவின் தலைவர்) மேஜர் ஜெனரல் ஷேக் ரஷித் பின் அஹ்மத் அல் முல்லா அவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும் முறை:

முக்கிய தடுப்பூசி மையமான அல் பைத் மெத்வாஹித்(Al Bait Metwahid hall) மற்றும் பிற சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

இதற்கான முன்பதிவிற்கு Uaqcovid.vaccine@mohap.gov.ae. என்ற இணையதள முகவரிக்கு மின்னஞ்சல்(email) அனுப்புவதன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து மேஜர் அல் முல்லா கூறும்போது, தொழில் சம்பந்தமாக தினசரி அதிக நபர்களை கையாளும் இடங்களான வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், உணவகங்கள், ஆண் மற்றும் பெண்களுக்கான சலூன்கள், தையல் கடைகள் போன்றவற்றில் வேலை செய்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸை தடுக்க இவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று கூறினார்.