துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று நிர்வாகக் கவுன்சிலின் 31வது தீர்மானத்தை அறிவித்தார். அதன்படி,
துபாயில் ஏற்கனவே உள்ள / புதிதாக கட்டப்படும் தொழுகை அறைகள் இஸ்லாமிய விவகார மற்றும் தொண்டு நிறுவனங்கள் துறையின் முன்னனுமதியைப் பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஃப்ரீ ஸோன் (free zones) மற்றும் சிறப்பு மேம்பாட்டு ஸோன்களில் உள்ள தொழுகை அறைகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய விவகார மற்றும் தொண்டு நிறுவனங்கள் துறையின் தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் பொது மற்றும் தனியார் தொழுகை அறைகளுக்கு உரிமம் வழங்கப்படும்.
முன்னனுமதி பெறாமல் புதிய தொழுகை அறைகளை ஒதுக்குவதோ, மாற்றம் செய்வதோ கூடாது என புதிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அரசுப் பதிவேட்டில் வெளிவரும் நாளில் இருந்து அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.@HamdanMohammed issues Resolution regulating prayer rooms in Dubai. The Resolution applies to all existing and planned prayer rooms.https://t.co/yYRobwVUr9
— Dubai Media Office (@DXBMediaOffice) September 26, 2021
