துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு, இசைஞானி இளையராஜா சென்றிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக விருப்பமான இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு இந்திய என பல மொழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான திரைப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.
இந்த நிலையில் தற்போது துபாய் EXPO 2020-வில் இந்திய அரங்கில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை காண பல நாட்டு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. துபாய் EXPO இந்திய அரங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டத்துடன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
View this post on Instagram
இந்நிலையில் இளையராஜாவை வரவேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தனது ஸ்டூடியோவை அவருக்கு சுற்றி காண்பித்து, அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில், ‘மேஸ்ட்ரோவை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி; எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசை அமைப்பார் என நம்புகிறேன்’ என்ற பதிவுடன் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.